Skip to main content

தமிழக ஊர்தி நிராகரிப்பு- பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்!

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

tamilnadu chief minister mkstalin wrotes a letter for pm narendra modi

 

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/01/2022) கடிதம் எழுதியுள்ளார். 

 

அந்த கடிதத்தில், "வ.உ.சி., பாரதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் படங்கள் அடங்கிய அலங்கார ஊர்த்தி மறுக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குடியரசு தின அணி வகுப்பில் தமிழக ஊர்தி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக, மாநில அதிகாரிகள் மூன்று முறை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்தனர். திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசின் குழுவினர் நிராகரித்திருப்பதை ஏற்க முடியவில்லை. நான்காவது சுற்றுக் கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலேயே, குடியரசுத் தின அணிவகுப்பு பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்