சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்த மக்கள், இளைய தலைமுறையின் பங்களிப்பை ஆதரிக்க வேண்டும்" என்று அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.