![tamilnadu 27 districts coronavirus relaxation government](http://image.nakkheeran.in/cdn/farfuture/S93-BddPuXvLOMJ_l-ZvZy259grk8e52tnDriwd8iUE/1623425471/sites/default/files/inline-images/lockeee_0.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை; 11, 27 மாவட்டங்களின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்தந்த மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டத் தளர்வுகளைப் பின்பற்றி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைவதைக் கருத்தில் கொண்டு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? என்பதுக் குறித்து பார்ப்போம்!
சலூன்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை பூங்காக்களில் நடைப்பயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செல்போன், கட்டுமானப் பொருட்கள் விற்பனைச் செய்யும் கடைகள் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இயங்கலாம்.
மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள் கடைகள் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இயங்கலாம்.
மிக்சி, கிரைண்டர், டிவி பழுதுநீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இயங்கலாம்.
பள்ளி, கல்லூரிகள் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தரும் நிறுவனங்கள் 50% பணியாளருடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ- பதிவு மற்றும் தொழிற்சாலை தந்துள்ள அடையாள அட்டையுடன் தொழிலாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லலாம்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளருடன் இயங்கலாம். 20% பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கண் கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை இயங்கலாம்.
மண்பாண்டம், கைவினைப் பொருள் விற்பனைக் கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இயங்கலாம்.
பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இயங்கலாம்.
வேளாண் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படலாம்.
அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் வரும் ஜூன் 14- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.