Skip to main content

சென்னைக்கு படையெடுக்கும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
Tamil Nadu Rural Development Officers



தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. நாளை வியாழக்கிழமை 12.07.2018 சென்னையில் முதல்வரிடம் பெருந்திரள் முறையீடு நடைபெறுகிறது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

 

 

இதற்காக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இன்றே சென்னைக்கு செல்கின்றனர். அரசின் அடக்குமுறைகளையும், தடைகளையும் முறியடித்து சென்னை நோக்கி செல்வோம் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்கேயும் எப்போதும் போதை... வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடைநீக்கம்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

Anywhere and always drugs... Dismissal of regional development officer

 

தர்மபுரியில், பணி நேரத்திலேயே மது போதையில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (53). பாலக்கோட்டில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். பணி நேரத்திலேயே  அடிக்கடி மது குடித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து சங்கர் மீது இரண்டாண்டுக்கு முன்பு புகார்கள் வந்தன.

 

இதையடுத்து அவர், அப்போதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் பணி நேரத்திலேயே குடித்துவிட்டு வருவதும், அலுவலகத்திலேயே மதுபானம் குடிப்பதுமாக இருந்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் இவருக்கு மதுபானங்களை கையூட்டாக வாங்கிக் கொடுத்து, ஒப்பந்தப் பணிக்கான 'பில்' தொகை காசோலைகளை பெற்றுச் செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.

 

இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு, ஒப்பந்ததாரர் ஒருவர் அவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். அதை சங்கர் தனது மேஜை டிராயரில் வைத்து இருந்ததை ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருந்தார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி விசாரணை நடத்தினார். பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

 

 

 

Next Story

செப்டம்பர் 26இல் ‘ஊராட்சி மணி’ திட்டம் தொடக்கம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

On September 26, the panchayat bell project started

 

செப்டம்பர் 26 ஆம் தேதி ஊராட்சி மணி என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஊராட்சி தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

 

இந்த ஊராட்சி மணி அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கும் விதமாக, மைய அழைப்பு எண்ணாக 155340 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.