
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மறுபுறம் நாடுமுழுவதும்ஆக்சிஜன் தட்டுப்பாடு பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 26,465 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 197 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 124 பேரும்தனியார் மருத்துவமனைகளில் 73பேரும்கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், கரோனாதடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,''தமிழகத்திற்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த இரண்டு நாட்களில் வழங்க வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது.அடுத்த இரண்டு வாரங்களில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக உயரும். தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒதுக்கியது துரதிருஷ்டவசமானது'' எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)