Skip to main content

'அரியர் மாணவர்கள் தேர்ச்சி' எனும் தமிழக அரசின் முடிவு தவறானது -ஏ.ஐ.சி.டி.இ தலைவர் கடிதம்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

 Tamil Nadu government's decision is wrong - AICTE chairman's letter


தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில், அரியர்ஸ்  வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும தலைவர் அனில் சகஸ்ரபுதே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதத்தின் வாயிலாக பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

அரியர் தேர்வு ரத்து குறித்து தமிழக அரசிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையின்போது ஏ.ஐ.சி.டி.இ தனது முடிவைத் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்