Published on 09/07/2020 | Edited on 09/07/2020
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மற்ற மாவட்டங்களைவிட மொத்த பாதிப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் உள்ள தகவல் தொடர்பு நிறுவனங்கள் அதிகபட்சம் 10 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அதேபோல் நிறுவனமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் ஐ.டி. ஊழியர்கள் பணிக்கு செல்லலாம் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.