தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29/11/2021) கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட அமுதம் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்து, சீரமைப்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, கு. செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி. அமுதா இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.