Skip to main content

விவசாய நிலத்தில் திடீர் பள்ளம்... தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு பரிந்துரைத்த வருவாய்த்துறை!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

salem

 

வாழப்பாடியில் விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கிளாக்காடு பகுதியை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் வழக்கம்போல அவரது விவசாய நிலத்தில் டிராக்டரால் உழுது கொண்டிருந்த போது, திடீரென்று 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தை கண்டு அதிர்ந்த துரைசாமி, வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். அதனையடுத்து வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். 

 

அந்த பள்ளமானது முதுமக்கள் தாழி அல்லது பழங்கால சுரங்கம் போல இருப்பதால் இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய பரிந்துரை வழங்கினர். விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட இந்த பள்ளத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்