Skip to main content

சேலம் மத்திய சிறையில் கைதி திடீர் சாவு; மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

Published on 17/10/2021 | Edited on 17/10/2021

 

 

Sudden death of inmate at Salem Central Jail; Magistrate Inquiry!

 

சேலம் மத்திய சிறையில் கைதி ஒருவர் திடீரென்று இறந்த சம்பவம் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்து வருகிறது.

 

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுப்ரமணி (வயது 58). இவர், திருட்டு வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார். 

 

கடந்த பத்து மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்ரமணி, சனிக்கிழமை (அக். 16) காலையில் திடீரென்று நெஞ்சுவலியால் சிறை வளாகத்தில் மயங்கி விழுந்தார். சிறை மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

 

sudde6666

 

இதுகுறித்து சேலம் மத்திய சிறை எஸ்.பி. செந்தில்குமார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கைதி சுப்ரமணி மாரடைப்பால் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

கைதி ஒருவர் இறந்தால், அதுகுறித்து மாஜிஸ்ட்ரேட் நேரில் விசாரணை நடத்த வேண்டும். அதன்படி, சேலம் மாவட்ட நீதிமன்றத்தைச் சேர்ந்த மாஜிஸ்ட்ரேட் ஒருவர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் சேலம் சிறை கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்