கரோனாவால் தேசமே முடக்கப்பட்டுள்ள நிலையில், இதையும் சாதனை காலமாக மாற்றலாம் என்று சாதனை புரிந்து அசத்தியுள்ளார் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன்.
கரோனாவின் கோரப் பிடியில் ரெட் ஜோனில் உள்ளது சென்னை. நாளுக்குநாள் தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் உயிர்பலியும் அதிகரித்துக்கொண்டேவுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். வயது மூத்தவர்களை அதிகம் கரோனா தாக்கும் என்ற அச்சம் நிலவிவரும் வேளையில் இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 55 வயதான சென்னை தெற்கு திமுக செயலாளரான மா.சுப்பிரமணியம் புதிய சாதனையை செய்து அசத்தியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 17 முதல் ஊரடங்கு காரணமாக முடங்கிப்போனது, இதனால் உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் உடற்பயிற்சி செய்பவர்களும் வீட்டிலே முடங்கி போனார்கள் ஆனால் இந்த காலத்தையும் உடற்பயிற்சி சாதனை செய்துகாட்டியுள்ளார் மா.சுப்பிரமணியன். கிண்டி தொழிலாளர் குடியிருப்பில் உள்ள தன் வீட்டு மொட்டைமாடியில் எட்டு வடிவில் ஓடுதளத்தை வரைந்து அதில் பயிற்சி செய்துவந்தார். இந்தநிலையில் கடந்த 18 ஆம் தேதி (27.2அடி/15.5அடி) அளவில் எட்டு வடிவிலான ஓடுதளத்தில் நான்கு மணி எட்டு நிமிடம் பதினெட்டு நொடிகள் இடைவிடாமல் 1,010 முறை ஓடி ஆசிய சாதனையாளராக ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த சோதனை காலத்தையும் சாதனை காலமாக மாற்றி ஊக்கத்தை அளித்துள்ளார். இவர் இதற்கு முன்பே பல நாடுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளில் 21.1 கிலோமீட்டர் தூரத்தை 112 முறை ஓடி கடந்து பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.