கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். மாணவி தற்கொலை தொடர்பாக, அந்தப் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமையாசிரியர் மீரா ஜாக்சன் ஆகிய இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த காவல்துறை, அவர்களைக் கைது செய்தது. அதைத் தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறை சிறையில் அடைத்தது.
இந்த நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று (24/11/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல்துறையினர் போக்ஸோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, ஆசிரியர் சக்கரவர்த்தியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. இதனையேற்ற நீதிமன்றம், அவரை இரண்டு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மேலும், நாளை மாலைக்குள் நீதிமன்றத்தில் அவரை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.