




Published on 23/11/2021 | Edited on 23/11/2021
சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தில் இறைவணக்கப் பாடல் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், பாமக மாணவர் சங்கம் சார்பாக சென்னை அடையாறில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்துவருவதைக் கண்டித்து அடையார் மத்திய கைலாஷ் கோயில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன், மாநில துணைத் தலைவர் ஈகை தயாளன், மாவட்டச் செயலாளர் வடிவேலு, மாணவர் சங்கச் செயலாளர்கள் செஞ்சி ரவி, முரளி சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பாமக மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்ரீராம் அய்யர் தலைமையில் நடைபெற்றது.