Skip to main content

நீட் தேர்வு முடிவு குறித்த அச்சம்... அதிர்ச்சி முடிவெடுத்த மாணவி..!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

fh

 

இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு காரணமாக உயிரிழப்புகள் தொடர்கின்றன. நீட் தேர்வுக்கு முதல்நாளே தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவியும், 15ஆம் தேதி சவுந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

 

நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு, நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து, அதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், இன்று (16.09.2021) செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே அனுசியா என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 40 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்