student incident private school silambam coach police arrested

Advertisment

சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிலம்பம் பயிற்சியாளரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தனியார் பள்ளியில் படித்து வரும் 12- ஆம் வகுப்பு மாணவிக்கு சீலியம்பட்டியைச் சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர், 8- ஆம் வகுப்பு முதல் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. கரோனா பொது முடக்கத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையிலும் சிலம்பம் பயிற்சியாளர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்று இருக்கிறார். கடைசி நேரத்தில் பெற்றோர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதை தொடர்ந்து மாணவியிடம் விசாரித்த போது, சிலம்பம் பயிற்சியாளர் பற்றித் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும், உடனடியாக சிலம்பம் பயிற்சியாளரை அடித்துப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

Advertisment

விசாரணைக்கு பின் தனியார் பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் ராஜா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.