Skip to main content

புயல் நிவாரணம் கேட்டா லஞ்சம் கேட்கிறார்கள்.. பார்வையற்ற தொழிலாளி ஆட்சியரிடம் புகார்!!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

கஜா புயல் தாக்கி 3 மாதங்களுக்கு இன்னும்  சில நாட்களே உள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கொடுத்து முடிக்கவில்லை.

 

இன்னும் சாலை மறியல், முற்றுகை என போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளது. கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என்று மீண்டும் மனு கொடுக்க பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள்.

 

 Storm relief;asks bribe .. blind worker complaint

 

இந்த நிலையில்தான் நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த குளத்தூர் தாலுகா கோட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண் பார்வையற்ற விவசாய கூலி தொழிலாளி ஜெயராமன் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கண் பார்வை இல்லை என்றாலும் கூலி வேலை செய்கிறேன். கஜா புயலில் என்வீடு சேதமடைந்தது அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பம் செய்தேன். 

 

நிவாரணப் பொருட்கள் கிடைத்தது ஆனால் நிவாரண தொகை கிடைக்கவில்லை என்பதை வட்டாட்சியரிடம் முறையிட்டேன் பலனில்லை.  கிராம நிர்வாக அலுவலரிடம் போனால் கிராம உதவியாளர் தனத்தை பார்க்கச் சொன்னார். கிராம உதவியாளர் தனமோ அரசு நிவாரணம் வேண்டும் என்றால் ரூ 1000 லஞ்சம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக சொல்கிறார். என்னால் லஞ்சம் கொடுக்க வசதி இல்லை அதனால் அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

அரசு நிவாரணம் வழங்க விண்ணப்பம் வாங்கும் அரசு ஊழியர்கள் பணம் பறிக்கும் சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களை ரொம்பவே பாதித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூர்யா சிவாவின் மனு; ‘போலீஸ் பாதுகாப்பு பேஷனாக மாறிவிட்டது?’ - நீதிபதி பரபரப்பு கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Judge sensational comment for Surya Siva petition

கடந்த ஆண்டு பா.ஜ.கவைச் சேர்ந்த சூர்யா சிவாவிற்கும், பாஜகவின் சிறுபான்மை அணியின் டெய்சி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டு அவர் வகித்து வந்த பதிவியில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சூர்யா சிவா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு இன்று (15-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, “மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம், ஒருவர், இருவர் போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது” என்று கருத்து கூறி அரசு தரப்பு வாதத்தை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

Next Story

ஊரை விட்டு ஒதுக்கியதால் வேதனை; வட்டாட்சியரிடம் ஆதார் கார்டை ஒப்படைத்த குடும்பத்தினர்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

nவர

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தில் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் மிஷின் வைத்துக்கொண்டு கூலி வேலை செய்து வருகிறார்.

 

இந்த வேலை செய்வதால் அனைத்து சமூகத்தைச் சார்ந்த நண்பர்களையும் அவர் கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள சிலருக்குப் பிடிக்காததால், பஞ்சாயத்தில் கூடி முடிவெடுக்கப்பட்டதாக குமார் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு தகாத வார்த்தைகளிலும் திட்டுவதாகக் கூறுகின்றார்.

 

மேலும் வீட்டிற்குச் செல்லும் தண்ணீர் குழாய் துண்டித்துள்ளதாகவும் எந்தக் கோயில்களிலும் அனுமதிக்காமலும் சுப துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்களாம். காரணம் கேட்கும் பொழுது இது பஞ்சாயத்தின் முடிவு என்று கூறுகின்றனர். அதே போல கோயிலுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தையும் திருப்பி குமாரிடமே கொடுக்கப்பட்டதாகவும் அடிப்படை உரிமை கூட கிடைக்காத இந்த மண்ணில் வாழ்வதைவிடச் சாவதே மேல் என குடும்பத்தோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததோடு, வட்டாட்சியர் கோவிந்தராஜியிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

 

நீங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாகக் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வட்டாட்சியர் கோவிந்தராஜ், “நிச்சயம் உங்களுக்கு நீதியை பெற்றுத் தருகிறேன்” என சொன்னதோடு மட்டுமல்லாமல் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.