
சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர் ஒருவரின் புத்தகப் பையில் ஜல்லி கற்களை வைத்திருந்ததற்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மின்சார ரயிலில் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், புத்தகப்பையில் ஜல்லி கற்களை வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் அந்தக் கல்லூரி மாணவனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனைப் பார்த்த சக கல்லூரி மாணவர்கள் பாதுகாப்புப் படையினரின் பிடியிலிருக்கும் மாணவனை விடுவிக்கக் கோரி ஆவடி பகுதியில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு புத்தகப்பையில் கற்களைக் கொண்டுவந்த மாணவர் விடுவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)