sterlite plant incident investigation commission

Advertisment

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு தொடர்பாக, ஒருநபர் விசாரணை ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

இதுவரை 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 35ஆவது கட்ட அமர்வில் ஆஜராகி விளக்கம் அளிக்க முன்னாள் காவல்துறை துணைத்தலைவர், தென்மண்டல காவல்துறைத் தலைவர், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட ஆறு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தின் போது, நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக பணியில் இருந்த கபில்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். வரும் ஜனவரி 29-ஆம் தேதி வரை விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.