Published on 12/04/2021 | Edited on 12/04/2021
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ- பாஸ் பெற வேண்டும் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால், மாநில எல்லைகளில் சோதனை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையும் மாநில எல்லைகளில் மருத்துவக் குழுவை நியமித்துள்ளது. இ- பாஸ் உடன் வருபவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களை ஆர்டி- பிசிஆர் பரிசோதனை செய்யத் துவங்கியுள்ளனர் மருத்துவத்துறையினர். அத்துடன் பரிசோதனை செய்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றனர். பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குப் பயணம் செல்ல அனுமதிக்கின்றனர்.