Skip to main content

ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்படுகிறது.

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
sridevi

நடிகை ஸ்ரீதேவி, துபாயில் நடந்த உறவினர் திருமணத்தின்போது ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் துபாயில் இருந்து மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கடுத்தக்கட்ட பணிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீதேவி மரணம் தொடர்பான குற்றச்சாட்டு - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
pinniti statement regards sridevi passed away issue CBI submit the charge sheet

பிரபல நடிகை ஸ்ரீதேவி, 2018ஆம் ஆண்டில், துபாயில் ஒரு ஓட்டல் அறையில் குளியல் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந் தீப்தி பின்னிதி என்பவர், ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இரு அரசுகளும் அதை மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும் அவரது யூட்யூப்பில், உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆவணங்கள் என கூறி பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதிய கடிதங்கள் என வெளியிட்டிருந்தார். இதையடுத்து தீப்தி பின்னிதி மீது மும்பையை சேர்ந்த சாந்தினி ஷா என்ற வழக்கறிஞர் பிரதமர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார். இந்த புகார் குறித்து தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் தீப்தி பின்னிதி வீட்டில் ஆய்வு மேற்கொண்டு, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றியது. 

இந்த நிலையில் தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் கடிதங்கள் உட்பட தீப்தி தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்” - ஸ்ரீதேவி மறைவு குறித்து போனி கபூர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Boney Kapoor speaks about Sridevi passed away

 

திரைத்துறையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். 

 

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது. 

 

இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் போனி கபூர். அவர் பேசுகையில், "முதலில், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. அது விபத்தால் ஏற்பட்டது. அதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் ஏற்கனவே 24 முதல் 48 மணி நேரங்களுக்கு மேல் என்னிடம் நடந்த விசாரணையில் பேசிவிட்டேன். இந்திய ஊடகங்களின் அழுத்தம் காரணமாக தான் நாங்கள் செல்ல வேண்டியிருந்ததாக துபாய் போலீசார் என்னிடம் தெரிவித்தனர். நான் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். அதை தவிர வேறெதுவும் சொல்வதற்கு இல்லை என அவர்களிடம் சொன்னேன். 

 

பின்பு இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே வேளையில் அங்கு நான் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றும் திரையில் நல்ல உடல் நளினத்தோடு தோன்ற வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக 46 - 47 கிலோவாக உடல் எடையை குறைத்தார். அது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரை பார்த்தால் தெரியும். 

 

இந்த சம்பவத்திற்கு முன்பு, அவருக்கு பல சந்தர்ப்பங்களில் சட்டென மயக்கமாகும் நிலைக்கு சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பிரச்சனை இருப்பதாக டாக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஒரு படத்திற்காக கடுமையான டயட்டில் இருந்தபோது, அப்போதும் குளியலறையில் ஒருமுறை விழுந்து பல் உடைந்ததாக ஸ்ரீதேவி இறந்த பின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்" எனப் பேசினார்.