Skip to main content

திருச்சி காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்த இலங்கை முகாம்வாசிகள்...! 

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

Sri Lankan camp residents thank Trichy Police Commissioner ...!

 

திருச்சி மாநகரக் காவல் ஆணையர், கடந்த 01.07.2021 அன்று திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைப் பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, முகாம்வாசிகளின் குறைகளைக் கேட்ட மாநகரக் காவல் ஆணையர், அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். 

 

கடந்த 19.07.2021 அன்று முகாம்வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நடத்தப்பட்டது. 22.07.2021 அன்று முகாமில் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys & Girls Club) துவக்கி வைக்கப்பட்டது. 26.07.2021 தேதியன்று இலவச சட்டப்பணிகள் குழு மூலம் முகாம்வாசிகள் தங்களது தாய்நாட்டில் சொத்துக்களைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. 02.08.2021 தேதியன்று தமிழ்நாடு அரசு மறுவாழ்வுதுறை மற்றும் பெல் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இலவச தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 04.08.2021 அன்று முகாமில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி சிதிலமடைந்துள்ளதால், அந்நிய நபர்கள் அனுமதியின்றி உள்ளே பிரவேசிப்பதைத் தடுக்க முகாம்வாசிகளின் கோரிக்கையின்பேரில், சிதிலமடைந்த சுவர் புதிதாக கட்டப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதன் தொடர்ச்சியாக, நேற்று (06.08.2021) திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் R. சக்திவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், திருச்சி மாநகரக் காவல்துறை மற்றும் புங்கே தனியார் நிறுவனத்துடன் இணைந்து முகாம் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும், அதனை நவீன காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. 

 

முகாமில் நிறுவப்பட்டுள்ள காவல் சிறுவர், சிறுமியர் மன்ற நூலகத்திற்குப் புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கண்டோன்மெண்ட் சரக காவல் ஆளிநர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகாம்வாசிகளுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு, எதிர்வரும் கரோனா மூன்றாம் அலை தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 

இத்தொடர் செயல்பாடுகளுக்கு முகாம்வாசிகள் திருச்சி மாநகரக் காவல்துறைக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள். மேலும், இப்பணியை சிறப்பாக செய்த கண்டோன்மெண்ட் சரக காவல் ஆளிநர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு திருச்சி மாநகரக் காவல் ஆணையர் பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்