Skip to main content

தடகள வீராங்கனைக்களுக்கு பாலியல் தொல்லை; ஜாமின் கோரிய பயிற்சியாளர்..! 

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

Sports trainer nagaraj bail pocso court

 

தடகள வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமின் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சென்னை நந்தனத்தை சேர்ந்த (ஜி.எஸ்.டி. அலுவலக அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற)  நாகராஜன் என்பவர் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற, தடகள பயிற்சி அகாடமியை பிராட்வே பகுதியில் நடத்தி வருகிறார். பயிற்சிக்கு வந்த தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மே 28ஆம் தேதி கைதான நாகராஜன் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி  நாகராஜன் தாககல் செய்த மனு நீதிபதி டி.எச்.முகமது பரூக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் ஜாமின் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.