Sports trainer nagaraj bail pocso court

Advertisment

தடகள வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமின் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை நந்தனத்தை சேர்ந்த (ஜி.எஸ்.டி. அலுவலக அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற) நாகராஜன் என்பவர் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற, தடகள பயிற்சி அகாடமியை பிராட்வே பகுதியில் நடத்தி வருகிறார். பயிற்சிக்கு வந்த தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மே 28ஆம் தேதி கைதான நாகராஜன் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி நாகராஜன் தாககல் செய்த மனு நீதிபதி டி.எச்.முகமது பரூக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், முழுமையாக முடிவடையாததாலும் ஜாமின் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.