இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் அருகே நிகழந்த விபத்து ஒன்றில் பெண் பல் மருத்துவர் ஒருவர், 90 சதவிகிதம் ஊனமடைந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்வதால் அதிகப்படியான விபத்துகள் நிகழ்கிறது. எனவே உயிரிழப்பை தடுக்க இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொறுத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் சாலைகளில் 120 கிமீ வேகத்தில் செல்லலாம் என்ற உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். பள்ளி பாடத்திட்டத்தில் சாலைவிதிகளையும் சேர்ந்து மத்திய, மாநில அரசுகள் கற்றுக்கொடுக்க வேண்டும்.' என்று மத்திய, மாநில அரசிற்கு உத்தரவிட்டனர். இதுதொடர்பாக இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழகும்படியும் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை ஆக.2 ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.