Published on 26/11/2021 | Edited on 26/11/2021
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த காலங்களில் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ளே நுழையும் பயணிகள் நடைமேடைக்கான அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
கரோனா காலத்தில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக அறிவித்தது. ரயில் நிலையங்களில் தங்களுடைய உறவினர்களை வழியனுப்புவதற்கும் மற்ற காரணங்களுக்காக வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் நுழைவு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளைமுதல் (27.11.2021) அனைத்து ரயில் நிலையங்களிலும் நுழைவு கட்டணமாகப் பெறப்பட்ட 50 ரூபாயிலிருந்து குறைத்து இனி நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.