Skip to main content

ஊரடங்கிற்கு  நடுவிலும் பரபரப்பு..!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Some private companies asking their employees to come to office


கரோனாவைக் கட்டுப்படுத்த 10-ந் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை, முழு ஊரடங்கை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதில் முக்கியமான அரசுத்துறை அலுவல்கங்கள் உட்பட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 

காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியத்துக்கு உதவும் சிறுகடைகள் மட்டும் மதியம் 12 மணிவரை திறந்திருக்கலாம் என்று விலக்களிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல்  அரசு ஆணை எண். 348 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவிப்பின் படி,  அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம், மருந்து நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்களும் கூட செயல்படலாம் என்கிறது அதிகாரிகள் தரப்பு.  இதை சாதகமாக எடுத்துக்கொண்ட தோல் பொருள் நிறுவனங்கள், இரும்பு உதிரிபாகத் தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள்  உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள், சென்னை, வேலூர் உட்பட, தமிழகம் முழுக்க ஊரடங்கிலும் இயங்கி வருகின்றன. குறிப்பாக சென்னை  அம்பத்தூர், கிண்டி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்குவதைப் பார்க்கமுடிகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோல் பெருமளவில் இயங்கும் நிறுவனங்கள்,  தங்கள்  ஊழியர்களை வலுக்கட்டாயமாக  தொழிற்சாலைகளுக்கு அழைப்படுவதால்,  தொழிலாளர்கள் தரப்பு அலுவலகம் செல்லப் படாதபாடு படுகின்றனர். அவர்கள் காவல்துறையினரின் விசாரணைகளையும் எதிர்கொள்கின்றனர். 

 

 ஊரடங்கைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தொழிற்பேட்டைப் பகுதிகளில் அதிக நடமாட்டத்தையும் , தொற்று பரவலுக்கான சூழலையும் பார்க்க முடிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்