தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக காவல்துறையினர் உதவியுடன் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களுடன் ரோந்துப்பணி மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காகவும், தேர்தல் அமைதியாகவும், நியாயமான முறையிலும், எவ்வித அசம்பாவிதங்களும் இல்லாமல் நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் பல்வேறு கம்பெனி ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 95 பேர் ரயில் மூலமாக நேற்று (02.03.2021) இரவு திருச்சி வந்து சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் துப்பாக்கிகளுடன் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி மார்கெட் வரை கொடி அணிவகுப்பினை நடத்தினர். இதில் மாநகர காவல் துணை ஆணையர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர் பங்கேற்க, பேரணியானது நேற்று ஒத்தக்கடை, கண்டோன்மென்ட், கோர்ட், அரசு மருத்துவமனை வழியாக புத்தூர் நான்கு வழிச்சாலைக்கு வந்தடைந்தனர்.
இன்று சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து துவங்கி காந்தி மார்க்கெட் பகுதி வரை அணி வகுப்பு நடத்தபட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு பாதுகாப்பு மற்றும் சோதனைச் சாவடிகளில் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.