Six senior lawyers have been appointed to represent the government!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக ஆறு மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தமிழக பொதுத்துறை செயலாளர் ஜெகந்நாதன் இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் எம்.அஜ்மல்கான், ஐசக் மோகன்லால் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.