
முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கைப் போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 22/07/2021 அன்று செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை (மேலும் 14 நாட்கள்) நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சிவசங்கர் பாபாவை காவல்துறை வேனில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து முழக்கமிட்டனர். பெண்கள் அழுகுரலோடு, ‘பாபா, பாபா’ என வேனில் இருந்த சிவசங்கர் பாபாவை பார்க்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)