சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (30/07/2022) மதியம் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, சித்தராமையாவுக்கு பொன்னாடைப் போர்த்தியும், புத்தகம் வழங்கியும் தமிழக முதலமைச்சர் வரவேற்றார். இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.