Skip to main content

சக பெண் ஊழியரை விருந்துக்கு அழைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; வெடிக்கும் போராட்டம்!!

Published on 13/11/2018 | Edited on 16/11/2018

    
தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம்.. இந்த ஊர் பெயரைக் கேட்டாலே போதும் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்ட மக்களும் சொல்வது பட்டுப்புடவை.. ஆம் பட்டுக்கு பேர் போன திருப்புவனத்தில் தான் இப்போது கூட்டுப் பாலியல் என்று பெயர் கெட்டுக்கிடக்கிறது.


     
அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண் பாரதி (21) ( பெயர் மாற்றம் ) சில மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்த நிலையில் குடும்ப சூழ்நிலையை நினைத்து நானும் வேலைக்கு போறேன் என்று சொன்ன பாரதியிடம் வேலைக்கு வேண்டாம் ஊரெல்லாம் கெட்டுக் கிடக்குது என்றார் அம்மா.. இல்லம்மா பத்திரமா போயிட்டு வருவேன் என்று சொன்ன பாரதி அங்குள்ள மீரா பட்டு சென்டருக்கு வேலைக்கு சென்றார்.
    

 

murder

 

தீபாவளி விடுமுறை அடுத்த நாள் அதே கடையில் வேலை செய்யும் காத்தாயி அம்மன் கோயில் தெரு தர்மலிங்கம் மகன் சின்னப்பா (43).. எங்க வீட்ல அமாவசை விருந்து எங்க வீட்டுக்கு வா என்று அழைக்க சக ஊழியர் அழைப்பதால் நம்பி வீட்டுக்கு போன பாரதியை ரத்தம் கொட்ட கொட்ட மயங்கிய நிலையில் மருத்துவமனையில் தான்  பார்த்தார்கள் தாயும் உறவினர்களும்..


    
சின்னப்பா வீட்டில் மதுவின் மயக்கத்தில் இருந்த மீரா பட்டு சென்டர் முதலாளி கார்த்திக் உள்ளிட்ட சில நண்பர்கள் பாரதிக்கும் குளிபானம் கொடுத்துள்ளனர். அதில் என்ன கலந்திருந்தது என்பது அவர்களுக்கு தான் தெரியும். சில மணி நேரம் சாத்தப்பட்ட கதவுகளுக்குள் பாரதியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. ரத்தம் கொட்ட தொடங்கியதும் ஒரு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தப்பிவிட்டனர்.


    
விபரம் அறிந்து அங்கே போன உறவினர்களிடம் எங்களால காப்பாற்றமுடியாது வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க என்று சொல்ல மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல தையல் போடப்பட்ட பிறகே ரத்தம் வெளியேறுவது நின்றுள்ளது.


    
அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சின்னப்பாவை மட்டும் கைது செய்துள்ளனர். இதில் பட்டு சென்டர் முதலாளி முதல் அவர்களின் கூட்டாளிகளும் இணைந்து பாரதியை சீரழித்துள்ளனர். அதனால் அவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாரதி குடும்பத்திற்கு இழப்பீடு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாதர் சங்கத்துடன் இணைந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரிடமும் மனு கொடுத்துவிட்டு கடையடைப்பு போராட்டமும் நடத்தியுள்ளனர்.


    
மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வி..  சமீப காலமாக கூட்டுப்பாலியல் என்ற கலாச்சாரம் அதிகமாக பரவிவிட்டது. மதுவின் போதையில் இருக்கும் இது போன்ற அரக்கர்கள் ஒன்று சேர்ந்து குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைத்து இது போன்ற கயவர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர். அது போல தான் திருப்புவனம் பாரதிக்கு நேர்ந்த கொடூரமும் நடந்துள்ளது. இது போன்ற கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் கடந்த மாதம் இறுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடியில் மருந்துக்கடைக்கு சென்ற கஸ்தூரி (19) என்ற பெண்ணுக்கும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி பள்ளி மாணவி மாணவிக்கும் இப்படி நேர்ந்துள்ளது. அடுத்தடுத்த இப்படி கூட்டு பாலியல் வன்முறை நடக்க காவல் துறை போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுடன் அதற்காண ஆதாரங்களையும் சாட்சியங்களையும் வழக்குகளில் சேர்ப்பதில்லை அதனால் அவர்கள் கொஞ்ச நாட்களில் வெளியே வந்து சுதந்திரமாக செயல்படுகிறார்கள். 


    
இனிமேலாவது பாரதி சம்பவத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை தமிழகம் தழுவிய போராட்டமாக கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகள்களை மிரட்டி பாலியல் தொந்தரவு; தந்தையின் கொடூர செயல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

sexual harassment of daughters by Father's in covai

 

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். 

 

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார். 

 

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால் சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.