Skip to main content

நான்கு வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.! போக்சோ சட்டத்தில் கொடூரன் கைது.!

Published on 28/08/2018 | Edited on 28/08/2018
chidd


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட இளஞ்செம்பூர் அருகே உள்ள எம்.சாலை கிராமத்தில் தாயாருடன் படுத்திருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை பாதிக்கபட்ட சிறுமியின் தாயார் திலகவதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கடலாடி அருகே உள்ள எம் சாலை என்ற கிராமத்தில் தன் தாயாருடன் இரவு உறங்கி கொண்டிருந்த சிறுமியை அங்கிருந்து தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது நேற்று முன்தினம் இரவு எட்டு மணியளவில் அருகில் படுத்திருந்த தன் குழந்தையை காணாமல் தாயார் எழுந்து தேடி அலைந்து கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் அழுது கொண்டிருந்த சிறுமியை பார்த்ததில் உடலில் காயங்களுடன் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து அருகிலுள்ள இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் கந்தசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் காயமடைந்த சிறுமியை சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இளஞ்செம்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.

சார்ந்த செய்திகள்

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Next Story

பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
POCSO case against BJP leader Yeddyurappa

பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது மகளுடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாகவும்’ கூறப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, அவர் இன்று (15-03-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “என் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது தெரிய வந்தது. அவர்கள், ஒரு மாதமாக என் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் அதை கவனிக்கவில்லை. ஆனால், ஒரு நாள் எனது பணியாளர்கள் அந்த பெண் அழுகிறார் என்று சொன்னார்கள். அதை கேட்டதும், அப்பெண்னை அழைத்து என்ன நடந்தது? என்று கேட்டேன். அப்போது, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக என்னிடம் கூறினார்கள்.

அதனால், இது தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனரை அழைத்து அப்பெண்ணுக்கு உதவுமாறு கூறினேன். ஆனால், அப்போதே அந்த பெண் என்னை எதிர்த்து பேச ஆரம்பித்தார். அந்த பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்து போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சொன்னேன்.  அவர்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தேன். இப்போது, இதை திரித்து என் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு உதவி செய்தால் இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். இது ஒரு அரசியல் சதி என்று நான் நினைக்கவில்லை, ஒரு பெண் புகார் அளித்துள்ளார், நாங்கள் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என்று கூறினார்