Skip to main content

சென்னையில் ஒரு வாரத்தில் ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Seven arrested in one week in Chennai

 

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொலை, போக்ஸோ, மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் தொடர்புடைய ஏழு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 124 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 

 

குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, திருட்டு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருட்கள் கடத்துபவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, உயிர்காக்கும் மருந்துகளைப் பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாகக் கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்