Skip to main content

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வளர்க்கும் கடல் சாகச பயணம்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
sdfg

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகள் கொண்டு இயங்கும் புதுச்சேரி என்சிசி குழுமம் தனது என்சிசி மாணவர்களுக்காக சமுத்திர நோக்கயான் என்ற கடல் சாகச பயணத்தை ஏற்படு செய்துள்ளது. அந்த பயணத்தின் படி புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு கடலில் சென்று மீண்டும் புதுச்சேரிக்கு திரும்ப வேண்டும். இந்த சாகச பயணத்தில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 25 மாணவிகள் உட்பட 60 என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சாகசக்குழுவினர் கடந்த 4-ந்தேதி கடலூர் வெள்ளி கடற்கரையை சுத்தம் செய்தனர். தொடர்ந்து அக்குழுவினர் 5-ந்தேதி காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றனர். 

 

பின்னர்  6-ந் தேதி பிச்சாவரம், கடற்கரை வழியாக இக்குழுவினர் பாய்மர படகு மூலம் புறப்பட்டு பரங்கிப்பேட்டை, பூம்புகார் மார்க்கமாக காரைக்காலை சென்றடைவார்கள். மீண்டும் காரைக்காலில் இருந்து புறப்பட்டு கடலூர் மார்க்கமாக வரும் 15-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தடைவார்கள். இக்குழுவினர் மொத்தம் 302 கிமீ கடல் பயணம் செய்கின்றனர். கடல் பயணம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியையும் தருகிறது. சாகசப்பயணத்தில் துடுப்பு படகு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கடற்படை கமாண்டர்கள் ரவிசங்கர், சுரேஷ்குமார் தலைமையில் பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்