Skip to main content

தாத்தா பாட்டியுடன் வசித்துவந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

Schoolgirl commits INCIDENT by hanging

 

சிறுவயதிலேயே தாயை இழந்து தாத்தா, பாட்டி, சித்தப்பாவுடன் வசித்துவந்த பள்ளி மாணவி தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவத்தால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவியின் சாவுக்குக் காரணம் என்ன என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தர்மலிங்கம். இவருக்கு திருமணமாகி சில வருடங்களில் மணிமேகலை என்ற மகள் பிறந்தார். அதன்பின் சில வருடங்களில் அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், மகளைத் தனது தாய், தந்தை, தம்பியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கோயம்புத்தூருக்கு வேலைக்காகச் சென்றுவிட்டார்.

 

மணிமேகலை தனது சித்தப்பா செந்தில் வீட்டில் தங்கியிருந்து அதே ஊரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று (10/08/2021) மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சித்தப்பா செந்தில், திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூஜை அறையில் நூல் கயிற்றில் மணிமேகலை சடலமாகத் தொங்கியதாகக் கூறியுள்ளார். 

 

அதன்பின்னர், அக்கம் பக்கத்தினர் வந்து மணிமேகலை உடலைக் கீழே இறக்கி, கீரமங்கலம் காவல்துறையினருக்கும் கோவையிலிருந்த மணிமேகலையின் தந்தை தர்மலிங்கத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்குச் சென்ற ஆலங்குடி டி.எஸ்.பி. வடிவேல் மற்றும் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறையினர் மாணவி இறப்பிற்கு காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை  செய்து வருகின்றனர். மேலும், தடய அறிவியல் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. உயரமான மேற்தளத்தில் எப்படி மாணவி கயிறு மாட்டினார்? மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.