![Sathyam Theater Open Photos](http://image.nakkheeran.in/cdn/farfuture/XwSnPPqi1UD21A4-_EuJk41VoC9GVMdulZOlnNPYNsE/1604995482/sites/default/files/2020-11/02_2.jpg)
![Sathyam Theater Open Photos](http://image.nakkheeran.in/cdn/farfuture/FcJmDQa7Z_SY3PMPTzLnUM4V0ATeDIa0Pn-hFTvDvsw/1604995482/sites/default/files/2020-11/01_2.jpg)
![Sathyam Theater Open Photos](http://image.nakkheeran.in/cdn/farfuture/JFP4qtOXgUDf94UcN0MIg2WNApktlDwg83tZpT1-2CQ/1604995482/sites/default/files/2020-11/03_2.jpg)
![Sathyam Theater Open Photos](http://image.nakkheeran.in/cdn/farfuture/DOEWDnBH8j5mt7qSZk0ieTcy_AW8fXp1n-UKPJdVefM/1604995482/sites/default/files/2020-11/04_2.jpg)
Published on 10/11/2020 | Edited on 10/11/2020
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் பலகட்ட ஊரடங்குகளுக்கும் தளர்வுகளுக்கும் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி அரங்கிற்குள் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் குறையாத சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது சென்னையில் பிரபலமான சத்யம் தியேட்டர் உள்ளிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி படம் பார்த்து வருகின்றனர்.