Skip to main content

'சத்யம்' பாப்கார்ன் எங்கிருந்து வருது தெரியுமா?

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

 

sathyam

 

'சத்யம் சினிமாஸ்' திரையரங்கு வரிசையில் சென்னையின் அடையாளம். ஆனால், சத்யம் சினிமாஸின் அடையாளம் என்றால் அது அங்கு மட்டுமே கிடைக்கும் பாப்கார்ன்தான். அந்தப் பாப்கார்னை சாப்பிடுவதற்கெனவே திரைப்படங்களுக்குச் செல்வோர் அதிகம். இப்படி இருக்கும் அந்த சத்யம் சினிமாஸை சமீபத்தில் பி.வி.ஆர். நிறுவனம் வாங்கப் போவதாக அறிவிப்பு வெளிவந்ததும் திரைப் பிரியர்கள் பாப்கார்ன் என்ன ஆகுமோ, சுவை மாறுமோ, விலை ஏறுமோ என்றுதான் அதிகம் கவலைப்பட்டனர். இவ்வளவு பிரபலமான அந்த பாப்கார்னுக்கு சுவை சேர்ப்பது அதனுடன் கலந்துசாப்பிட அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஃபிளேவர் எனப்படும் சுவை கூட்டித் தூள்தான்.  'மெக்ஸிகன் ச்சீஸ், சோர் கிரீம் அண்ட் ஆனியன் மற்றும் ஸ்வீட் சில்லி பார்பிகியூ' (Mexicana Cheese, Sour Cream and Onion, Sweet Chili Barbecue) என்று மூன்று ஃபிளேவர்கள் வைக்கப்படுகின்றன. இந்த ஃபிளேவர்கள் வேறு எங்கும், இங்கு சுவைப்பது போன்ற சுவை இல்லை என்கின்றனர் ரசிகர்கள். இதுதொடர்பாக பலபேர் 'இவ்வளவு சுவையான பாப்கான் உங்களிடம் மட்டுமே கிடைக்குது, இதை எப்படி செய்கிறீர்கள் என்று, நிச்சயம் கேட்டிருப்பார்கள். அதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் இப்போது எஸ்.பி.ஐ நிறுவனம் தனது 'ட்விட்டர்' பக்கத்தில். "நெப்ராஸ்காவில் இருக்கும்  நதிக்கரையிலிருந்து, ப்ரிஃபெர்ட் பாப்கார்ன் (preferred popcorn) என்னும் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளது. நெப்ராஸ்கா, அமெரிக்காவில் மூன்றாவது பெரும் கார்ன் (சோளம்) பயிர்செய்யப்படும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்து வருடங்களுக்கு முன்னரே சத்யம் சினிமாஸ் இந்த இடத்தைக் கண்டறிந்தது எப்படி தெரியுமா? ஒருமுறை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் 'கிரண் ரெட்டி'யும் மேலாளர் 'பவேஷ் ஷா'வும்  'ஹாங்காங்'கில் ஒரு திரையரங்குக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு அமெரிக்க விவசாயியின் கடைக்குச் சென்று பாப்கார்ன் சுவைக்க நேர்ந்திருக்கிறது. அந்த சுவை அற்புதமாக இருந்ததைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்தே தொடர்ந்து 15 வருடங்களாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, இங்கு பாப்கார்ன் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.              

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அப்பாடா... இத்தனை மாசம் கழிச்சு தொறந்தாச்சு... எப்படி இருக்கு சத்யம் தியேட்டர்? (படங்கள்)

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் பலகட்ட ஊரடங்குகளுக்கும் தளர்வுகளுக்கும் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. 

 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி அரங்கிற்குள் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கரோனா அச்சுறுத்தல் குறையாத சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது சென்னையில் பிரபலமான சத்யம் தியேட்டர் உள்ளிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி படம் பார்த்து வருகின்றனர்.

 

 

Next Story

இதனால் உலகின் ஏழாவது இடத்திற்கு முன்னேறும் பி.வி.ஆர். சினிமாஸ்

Published on 13/08/2018 | Edited on 14/08/2018

எஸ்பிஐ என்னும் சத்தியம் சினிமாஸின் 71.7% பங்குகளை  பி.வி.ஆர். சினிமாஸ் தன்வசமாக்கப் போகிறது. சத்தியம் சினிமாஸ் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை என மொத்தம் 76 திரைகளுடன் 10 நகரங்களில் இருக்கிறது. தமிழகத்தில் சத்தியம், எஸ்கேப், எஸ்2 ஆகிய பெயர்களுடன் சத்தியம் சினிமாஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

இதன் 71.7% பங்குகளை அதாவது 2,22,711 பங்குகளை 6.33 கோடி ரூபாய்க்கும்,  இதை தவிர 1.6 மில்லியன் பங்குகளை தலா ஒரு பங்கு 1,371.2 ரூபாயென, 2.1 மில்லியன் ரூபாய் கொடுத்ததும் வாங்கியுள்ளனர். சத்யம் சினிமாஸை மொத்தம் 850 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக பி.வி.ஆர். சினிமாஸ் தெரிவித்துள்ளது.

 

sathyam

 

இதுகுறித்து பி.வி.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜிலி  "2020க்குள் 1,000 திரை என்னும் இலக்கை  நோக்கி நகர்வதற்கான வேலைகளில் இதுவும் ஒன்று" என்று தெரிவித்தார். 

 

இன்னும் 30 நாட்களில் பணப்  பரிவர்த்தணைகளும், 9 முதல் 12 மாதங்களில் இணைப்பு நடவடிக்கைகளும் முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த இணைப்பின் மூலம் பி.வி.ஆர். 60 நகரங்களில், 706 திரைகளுடன் உலக அளவில் 7ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.