சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று (16.10.2021) மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில், அவருக்குத் தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பளித்தனர்.

Advertisment

அதன்பின் மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் சென்ற சசிகலா, அங்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், நினைவிடத்திலிருந்து தி.நகர் இல்லத்திற்கு திரும்பியபோது ஆதரவாளர்களைச் சந்தித்தார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

Advertisment

alt="ads" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0db737f1-476b-4c80-ac04-2f80774063ea" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_149.jpg" />