Skip to main content
Breaking News
Breaking

சட்டப்பேரவையின் விதி எண் 110- ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர்!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

 

Rule No. 110 of the Legislature-  Chief Minister of Tamil Nadu has issued notices under!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் விதி எண் 110- ன் கீழ் இன்று (27/08/2021) பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

 

அதில், இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும். இலங்கை தமிழரின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசு ஏற்கும். ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூபாய் 5 கோடி, கல்விக்காக ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும். இலங்கை தமிழர் நலனுக்காக ஆண்டுதோறும் ரூபாய் 6 கோடி என ரூபாய் 30 கோடி ஒதுக்கப்படும். தமிழகத்தில் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வீடுகள், சாலை, குடிநீர் சேவை மேம்படுத்தப்படும். இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூபாய் 317.40 கோடி நிதி ஒதுக்கப்படும். 

 

இலங்கை தமிழர்களின் பழுதடைந்த வீடுகள் சீரமைத்து தரப்படும். அகதிகள் முகாம்களில் உள்ள 300 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும். அகதிகள் குடும்பத்திற்கு விலையில்லா எரிவாயு இணைப்பு வழங்கப்படும். அரசு கல்லூரிகளில் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும். பாலிடெக்னிக்கில் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூபாய் 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

 

சார்ந்த செய்திகள்