மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் பயணமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 22/07/2021 அன்று விமானம் மூலமாக மதுரை வருகிறார். மதுரை சத்யசாய்நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் வருகையை முன்னிட்டு மதுரை விமானம் நிலையம் முதல் மாநகர் முழுவதிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, ஆங்காங்கே வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அவர் தங்கும் விடுதிகளிலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும். @Collectormdu @city_madurai pic.twitter.com/B7uwv6Tibr
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 21, 2021
மேலும், மதுரை மாநகராட்சி சார்பில் விமான நிலையத்திலிருந்து அவர் கலந்து கொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளைப் பராமரிக்கவும், அவரின் வருகையின் போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சியின் உதவி ஆணையாளர் (பணியமைப்பு) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் உத்தரவு குறித்து மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.