விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. தகுதியுள்ள அனைவருக்கும், வெளிப்படைத்தன்மையோடு நிவாரணம் வழங்கப்படும். பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
பெண்களின் கைகளில் கிடைக்கும் நலத்திட்டம், குடும்பத்திற்கு முழுமையாகச் சென்று சேரும். நிதிநிலையை விரைவில் சீர் செய்தபிறகு, குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் தொடங்கிவைப்பார். வீட்டில் குழந்தைகளைத் தனியாக ஆன்லைன் வகுப்பில் படிக்கவைக்கும் நேரத்தில் பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளோடு பெற்றோர்கள் அதிகம் பேச வேண்டும்” என்றார்.