Published on 07/07/2021 | Edited on 07/07/2021
![Rotten eggs given at the Anganwadi Center ... Parents shocked!](http://image.nakkheeran.in/cdn/farfuture/QcxrTmv3FTFzghEXZwZYgDGST1226H7uHKiD7GZP2NQ/1625634660/sites/default/files/inline-images/egg3.jpg)
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட முட்டைகளில் அதிகப்படியான முட்டைகள் அழுகிய முட்டைகளாக இருந்தது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் கடலாடி சிறைகுளம் அருகே உள்ள ஆய்க்குடி அங்கன்வாடி மையம் கரோனா காரணமாக மூடப்பட்டதால், குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று முட்டைகள் வழங்கப்பட்டன. அப்படி கொடுக்கப்பட்ட 200 முட்டைகளில் சுமார் 120 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன.
அங்கன்வாடி மையத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 20 குழந்தைகள் படித்துவருகின்றனர். ஒரு குழந்தைக்கு 10 முட்டை வீதம் 200 முட்டைகள் மொத்தமாக வழங்கப்பட்டன. அதில் 120 முட்டைகள் கெட்டுப்போன அழுகிய நிலையிலும், கோழிக்குஞ்சுகள் வரும் நிலையிலும் முட்டைகள் இருந்ததால் இதனைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.