Skip to main content

ரோசய்யா மறைவு! ராமதாஸ் இரங்கல்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Rosalia's passe away! Ramadoss mourning!

 

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா (வயது 88) இன்று (04/12/2021) காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஐதராபாத்தில் காலமானார். 

 

ரோசய்யா மறைவுக்குப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

 

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். சட்டமன்ற, மேலவை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என அரசு நிர்வாகத்தில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலும், அனுதாபங்களும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்