தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (27/11/2021) தலைமைச் செயலகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திரபாபு இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., காவல்துறைக் கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) கே. வன்னியபெருமாள் இ.கா.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில்குமார் இ.ஆ.ப., சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ். வளர்மதி இ ஆ.ப., சட்டத்துறை (சட்ட விவகாரங்கள்) செயலாளர் பா. கார்த்திகேயன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.