பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நேற்று(29-7-2021) தலைமை நிர்வாகி N.கதிரேசன் தலைமையில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஆலை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வைக்கப்பட்ட முன்மொழிகள் “2019-2020ம் ஆண்டு அரவை 2 லட்சத்து 2000 டன் அறைக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 31கோடியே 86லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பாக்கி 22கோடியே 90லட்சம் பாக்கி உள்ளது. சர்க்கரை இருப்பு 1,62,770 குவிண்டால் , ரூ. 54கோடியே 74 லட்சம் உள்ளது. இந்த தொகையை வழங்க வழிவகைக் கடன் 21கோடியே 31லட்சம் கோறப்பட்டுள்ளது. இணைமின் உற்பத்தியில் 1,21,6500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. த. மி. வாரியத்திற்கு கொடுத்ததில் பாக்கி ரூ. 6 கோடியே 81 லட்சம் வரவேண்டியுள்ளது. 500டண் மொலாசஸ் இருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. 2020-2021ம் ஆண்டுக்கு 10,000 ஏக்கரில் கரும்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 3லட்சம் டன் அரைப்பது எனவும், 10-12-2021ல் கரும்பு அரவையை துவங்குவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது”.
அதே போல் கூட்டத்தில் பதினொறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை, “வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை அறிவித்த தமிழக அரசை இந்த கூட்டமைப்பு வாழ்த்தி வரவேற்கிறது. நன்றி பாராட்டுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் தமிழக அரசுக்கு இந்த கூட்டமைப்பு நன்றி தெரிவித்து கொள்கிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் ஆலையை நிறுவ வேண்டும் என தமிழக அரசை இந்தகூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தற்போது உள்ள இணைமின் திட்டத்தை கூடுதலாக 35 மெகாவாட் மின் உற்பத்திசெய்யும் திறன் உள்ள கட்டமைப்பை உறுவாக்க வேண்டும் என இந்த கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த கரும்பு டன்னுக்கு ரூ. 4000 என்ற அறிவிப்பை இந்த ஆண்டுக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்கவேண்டும் என இந்த கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலிப்பணியிடத்தை உடனே நிறப்ப வேண்டும் என இந்த கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. இணைமின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் பெறப்பட்ட பங்குத் தொகைக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பங்குப்பத்திரம் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு பங்குபத்திரம் வழங்கவேண்டும் என இந்த கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. 2020-2021ம் ஆண்டுக்கு கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு டண்ணுக்கு ரூ. 1900 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரவைப்பருவம் துவங்குவதற்குள் முழுதொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்த கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. பெ. ச. ஆலைக்கு உட்பட்ட வேட்டக்குடி கரும்புக் கோட்டத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இந்த கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சர்க்கரை விற்ப்னையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை மாநில அரசின் அதிகாரத்தில் விடவேண்டும் என இந்தக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் அரசின் ஆவின் பால் நிறுவனத்தால் ஒரே ஒன்றியமாக இருக்கிறது. அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் அதிகப்படியான பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இருப்பதாலும், கூடுதலான பால் உற்பத்தியாளர்கள் இருப்பதாலும் நிர்வாக செயலாண்மைக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்க அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை தனி ஆவின் பால் ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என இந்த கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பல அதிகாரிகளும், அந்தந்த சங்க தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.