Published on 08/09/2021 | Edited on 08/09/2021
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (8ஆம் தேதி) குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் நகர ஐக்கிய ஜமாத் சார்பாக வடக்குவீதி கஞ்சித்தொட்டி முனையில், சிதம்பரம் நகர ஜமாத்தார்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நவாப் பள்ளி வாசல், பூதக்கேணி பள்ளி வாசல், லப்பை தெரு பள்ளி வாசல் நிர்வாகிகள், தமுமுக, மமக, மஜக, முஸ்லிம் லீக், நகர ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற உறுப்பினர் உசேன் முகமது, உசேன் காதர் மஸ்தான் சலாவுதீன், ஜாபர் உசேன், முகமது இக்பால், முகமது ரபிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.