சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யக்கூடாது என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
மறைந்த தி.மு.க.வின் மூத்த தலைவர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாளின் தொடக்க நாளான இன்று (19/12/2021) சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மளிகை" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (19/12/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அம்மா மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அம்மா வளாகம் என்ற பெயரை மாற்றிவிட்டு பேராசிரியர் க.அன்பழகன் என மாற்றுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெயர் மாற்றத்தை கைவிட்டு, புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும் போது, அதற்கு அவரின் பெயரே சூட்டலாம் என முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.