Skip to main content

ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றவர் கைது!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

Remdesivir drug dealer in salem

 

தமிழகத்தில் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைக்கின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் அதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது. இதனால் ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

 

தேவையைச் சாதகமாக்கி ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்கும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்ற தனியார் மருத்துவமனை ஊழியர் பிடிபட்டுள்ளார். அழகாபுரம் தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி அதிக விலைக்கு விற்றபோது பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாத்தாவுக்கு வாங்கிய இரண்டு  ரெம்டெசிவிர் மருந்தில் ஒன்றை காயத்ரி என்பவருக்கு அதிக விலைக்கு விற்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்