எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு தற்போது விலையைக் குறைக்க சொல்லி மாநிலங்களிடம் கேட்பது தான் கூட்டாட்சியா? என்று தமிழக நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், இந்தியா முழுவதும் எரிபொருட்கள் மீதான விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 2014- ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசு எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல், பெட்ரோல் விலையை 23 ரூபாய், அதாவது 250 சதவீதமும், டீசல் விலையை 29 ரூபாய், அதாவது 900 சதவீதமும் உயர்த்தியுள்ளது. ஆனால் உயர்த்தியதில் இருந்து தற்போது அதில் 50 சதவீதத்தைக் குறைத்துவிட்டு, மாநிலங்களைக் குறைக்க சொல்லிக் கேட்கின்றனர். இதுதான் கூட்டாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.