Published on 23/02/2021 | Edited on 23/02/2021

வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதியில், அரசு வழங்கும் விலையில்லா அரிசி கடத்தப்படுவதாகப் பறக்கும் படைக்குத் தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வாகன சோதனை நடத்தியபோது, இன்டிகா காரில் சிப்பம் சிப்பமாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த குமார், சுரேஷ் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த 400 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்து குடோனுக்கு அனுப்பிவைத்தனர். காரில் இருந்த குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் வேலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.